Single Blog Title

This is a single blog caption

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறதா?-வழக்கு மன்றம் கேள்வி

//
Posted By
/
Comment0
/

‘ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினால் குற்றமா’ என்று தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பதிவு செய்யும் பொய் வழக்குகளை கண்டித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஸ்டெர்லைட் போராட்டத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள காவல்துறை, தொடர்ந்து பொது மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. நேற்று எஸ்.பி. முரளி ரம்பா ஆஜரானார். அவர் தாக்கல் செய்த அறிக்கையை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், “காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தனியார் நிறுவனத்துக்கு எதிராக பேசினால் அது குற்றமா. அப்படியெனில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.  காவல்துறையின் அறிக்கையை பார்க்கும் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிகிறது” என்று கண்டித்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின்  நகல்களைத் தாக்கல் செய்ய தூத்துக்குடி எஸ்.பி-க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply