Single Blog Title

This is a single blog caption

ஜோமா : பிலிப்பைன்ஸ் நாட்டு புரட்சியாளர்

//
Posted By
/
Comment0
/

மாபெரும் வாழும் உலகப் புரட்சியாளரும் பிலிப்பைன்ஸ் புரட்சியின் தன்னிகரில்லா தலைவருமான தோழர் ஜோஸ் மரிய சிசன் அவர்களின் எண்பதாம் பிறந்த நாளில்(பிப்ரவரி 8) பெரும் செவ்வணக்கத்துடன் வாழ்த்துவோம்!!!

……………………………………………………………

உலகில் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியே இன்று வேறு எந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் விட பிலிப்பைன்ஸ் என்ற தனியொரு நாட்டில் புரட்சிகர இயக்கத்தை வலுவாக முன்னெடுத்து வருகிறது.

அத்தகைய புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தும் தோழர் ஜோஸ் மரிய சிசன் அவர்களுக்கு எண்பதாவது பிறந்த நாளில் புரட்சிகர வாழ்த்துகள்!!!

ஜோஸ் மரிய சிசன்

தோழர் ஜோஸ் மரிய சிசன் தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழ முடியாமல் தனது ஐம்பதாவது வயதில், அதாவது முப்பதாண்டுகளுக்கு முன் நெதர்லாந்து நாட்டிற்கு சென்றார். ஆனால் அவரால் தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது. அவர் அங்கு சென்றால் புரட்சியை நடத்தி விடுவாராம்.

ஆனால் தோழர் ஜோஸ் மரிய சிசன் அங்கு செல்லாமலேயே(அவரது மனைவி ஜூலி அங்கு செல்ல முடிகிறது. தோழர் சிசனால் இன்னமும் செல்ல முடியவில்லை.)அங்குள்ள புரட்சிகர இயக்கத்தை நெதர்லாந்திலிந்து முப்பதாண்டுகளாக வழிகாட்ட முடிகிறது.

‘ஜோமா’ என்றே தனது தோழர்களால் நேசத்துடன் அழைக்கப்படும் தோழர் ஜோஸ் மரிய சிசன் கட்சி, இராணுவம்(NPA-New People’s Army), ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்டமைப்புகளையும் கட்டுக்கோப்பாக கட்டியமைத்து சுரண்டல் ஆட்சியாளர்களுக்கு சவாலாக விளங்குகிறார்.

சுரண்டல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் தோழர் ஜோமா 1987ல் பிலிப்பைன்ஸ் சிறைச்சாலையிலிருந்து பிணையில் விடுதலையான அன்றே நெதர்லாந்து சென்றார். ஆனால் அவர் நாடு திரும்ப முடியாதவாறு தடை விதித்து அதை இன்றுவரையிலும் அமலில் வைத்துள்ளது பிலிப்பைன்ஸ் அரசாங்கம்.

தோழர் ஜோமாவின் அரசியல் வாழ்க்கைக்கான வயதோ அறுபது; அவர் மறுசீரமைத்த பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கான வயதோ ஐம்பது; அவருக்கோ வயது எண்பது.

இத்தகைய ஜோஸ் மரிய சிசன் நெதர்லாந்திலிருந்து இருந்து கொண்டே பிலிப்பைன்ஸ் நாட்டின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சொந்தமான கடல் பரப்பை சீன ஏகாதிபத்தியமானது ஆக்கிரமிப்பதற்கு எதிராக நெதர்லாந்தில் இருந்துகொண்டே பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசாங்க கடற்படை தளபதிகள் இடையே சீன எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு அங்கிருந்து காணொளியில் உரையாற்றுவதை கூர்நது கவனிக்கும் அளவுக்கு அவருடைய முக்கியத்துவம் அமைகிறது.

உலகில் இன்று எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியை விட தோழர் ஜோமா தலைமையிலான பிலிப்பைன்ஸ் கட்சியே ஐக்கிய முன்னணி என்பதை வெற்றிகரமாக செயற்படுத்தி வருவதுடன் ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாட்டை சிறப்பாக பயன்படுத்தி தனது நாட்டில் புரட்சிகர இயக்கத்திற்கு செவ்வனே வளர்த்து வருகிறார்.

உலகின் பல புரட்சிகர இயக்கங்கள் இடையே புரையோடிப் போயுள்ள வறட்டுவாதம், அனுபவவாதம், கட்சியை திடப்படுத்தாத தன்னெழுச்சி ஆகியன இல்லாமல் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இந்த உச்சிக்கு வளர்ந்திருப்பதற்கு வாய்ச் சவடால் இல்லாத இந்த எண்பது வயது மாபெரும் தலைவரே அதற்கு காரணகர்த்தா ஆவார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் எவரையும் விட அங்கு நடப்பதை முன்கூட்டியே அறிவதும் கணிப்பதும் அங்கு வசிக்காத தோழர் ஜோமாவுக்கு கைவந்த கலை.

இத்தகைய தோழர் ஜோமாவை சுமார் இருபதாண்டுகளுக்கு முன் நெதர்லாந்திலிருந்து அப்புறப்படுத்தி பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான எத்தனிப்பு முறியடிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் புரட்சிகர இயக்கம் இன்று இந்த அளவு உச்சத்திற்கு சென்றதற்கு முக்கிய பங்காற்றிய அம்சம் என்னவெனில் கட்சிக்குள்ளும் வெளியேயும் நிகழ்ந்த தவறுகளை ஆறாண்டுகள் சீர்செய் இயக்கம்(Rectification Campaign) நடத்தி பகிரங்கமாக வெளியே சொன்னதாகும். அதன் பின்னர் மக்கள் திரள்கள் பாய்ச்சல் வேகத்தில் கட்சியில் இணைந்தனர்.

கட்சியானது தான் செய்த தவறுகளை மக்கள் திரள்களிடம் சுயவிமர்சனமாக கொண்டு சென்றதில் தலைமைப் பங்காற்றியது தோழர் ஜோமா என்றால் மிகையல்ல.

இத்தகைய தோழர் ஜோமாவின் எண்பதாவது பிறந்த நாளில் அவர் வாழ்வாங்கு வாழ்வதற்கு மீண்டும் ஒரு தடவை செவ்வணக்கத்துடன் வாழ்த்துவோம்!!!

– பாஸ்கர்

(கட்டுரையாளர் கம்யூனிச அரசியல் செயற்பாட்டாளர் ஆவார்)

Leave a Reply