Single Blog Title

This is a single blog caption

ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை!

//
Posted By
/
Comment0
/

வெளிமாநில மாணவர் மரணம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிப்பிட் பகுதியைச் சேர்ந்தவர் குருசந்த். இவரது மகன் கோபால் பாபு (26). சென்னை ஐஐடியில் எம்.டெக். ப்ரோகிராமிங் படித்து வந்தார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பிரம்மபுத்திரா விடுதியில் தங்கி இருந்தார். வழக்கம்போல் பாடம் முடிந்து கல்லூரியின் விடுதியில் நேற்றிரவு அவரது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

தூக்கிட்டுக்கொண்ட மாணவர்

பின்னர் அனைவரும் உறங்கச் சென்றனர். காலையில் அனைவரும் எழுந்து வகுப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கோபால் பாபு அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் மாணவர்கள் அவரது அறைக்கதவைத் தட்டினர். கதவு திறக்கப்படாததால் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நிர்வாகத் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீஸார் வந்து அறைக் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். உள்ளே மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கோபால் பாபு உடல் தொங்கியபடி இருந்தது. உயிரற்ற அவரது உடலை மீட்ட கோட்டூர்புரம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டாவது சம்பவம்

கடந்த 1-ம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவி தனது அறைக்குள் தற்கொலை செய்துகொண்டார். ஒரே மாதத்தில் நடந்த இரண்டு தற்கொலை சம்பவங்களால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Leave a Reply