Single Blog Title

This is a single blog caption

அரசியல் கட்சிகள் ஏன் தொடங்கப்பட்டன?

//
Posted By
/
Comment0
/

இன்று ப‌ல‌ர் த‌வ‌றாக‌ நினைப்ப‌து மாதிரி, அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் தேர்த‌லில் போட்டியிடுவ‌த‌ற்காக‌ உருவாக்க‌ப் ப‌ட‌வில்லை.

19ம் நூற்றாண்டில், க‌ட்சிக‌ள் தோன்றிய‌ ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில், ச‌மூக‌ மாற்ற‌த்தை விரும்பிய‌ சில‌ர் ஒன்று சேர்ந்து அமைப்பாக‌ இய‌ங்கினார்க‌ள். 1846 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உருவான‌ Anti- Corn Law League ஒரு சிற‌ந்த‌ உதார‌ண‌ம். தானிய‌ங்க‌ள் மீதான‌ இற‌க்கும‌தி வ‌ரியை எதிர்த்து உருவான அமைப்பு அர‌சிய‌ல் மாற்ற‌த்திற்கான‌ இய‌க்க‌மாக‌ வ‌ள‌ர்ந்த‌து.

அந்த‌ உதார‌ண‌த்தை பின்பற்றி ஜேர்ம‌னி, நெத‌ர்லாந்து ஆகிய‌ நாடுக‌ளில் சோஷ‌லிச‌- தொழிலாள‌ர் க‌ட்சிக‌ள் (அல்ல‌து இய‌க்க‌ங்க‌ள்) உருவாகின‌. த‌ற்போதும் அந் நாடுக‌ளில் இய‌ங்கும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் யாவும், ச‌ட்ட‌ அடிப்ப‌டையில் அமைப்புக‌ளாக‌வே ப‌திவுசெய்ய‌ப் ப‌டுகின்ற‌ன‌.

இந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் தோன்றிய‌ கால‌த்தில் உல‌கில் எந்த‌ நாட்டிலும் பொதுத் தேர்த‌ல் என்ற‌ பேச்சே இருக்க‌வில்லை. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை கூட‌ கிடைக்க‌வில்லை.

ஆக‌வே அரசிய‌ல் க‌ட்சிக‌ள் என்ப‌து “ஜ‌ன‌நாய‌க‌ பொதுத் தேர்த‌லுக்காக‌ செய‌ற்ப‌டுவ‌தாக‌” க‌ருதிக் கொள்வ‌து உண்மை அல்ல‌. சில‌நேர‌ம் அது ஒரு க‌ட்சியின் கொள்கையாக‌ இருந்திருக்க‌லாம். எல்லாக் க‌ட்சிக‌ளும் தேர்த‌லில் போட்டியிடுவ‌தை நோக்க‌மாக‌ கொண்டிருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. இந்த‌ மாயை, பிற்கால‌த்தில் உருவாக்க‌ப் ப‌ட்ட‌ த‌வ‌றான‌ க‌ருதுகோள் ஆகும்.

– கலையரசன்

Leave a Reply